Thursday, April 7, 2022

பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


புதுடெல்லி: டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.

யமஹா எலக்ட்ரிக் சைக்கிள் விலை
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (E-Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும். 

அதே நேரத்தில், எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம் கிடைக்கும். இது தவிர, கனரக மின்சார வாகனங்கள் மற்றும் வணிக மின் வண்டிகளுக்கும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மின்சார சைக்கிள், ஹெவி டியூட்டி எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் இ-கார்ட்ஸ் எலக்ட்ரிக் சைக்கிள் ஆகியவற்றிற்கான மானியத்தை அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

மின்சார சைக்கிள் வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்கள் இந்த மானியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.  

இ-கார்கோ மற்றும் ஹெவி டியூட்டி இ-சைக்கிளில் கிடைக்கும் கார்கோ இ-சைக்கிள் வாங்கும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும்.  
இப்போது நிறுவனங்களும் திட்டத்தின் பலனைப் பெறும்.

மின்சார வாகனங்கள் அல்லது ஹெவி டியூட்டி சைக்கிள்களை வாங்கும் தனிப்பட்ட வாங்குபவர்களுக்கு முன்பு இந்தச் சலுகை கிடைத்தது,  இப்போது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கார்ப்பரேட் அல்லது நிறுவனம் இ-கார்ட் (e-carts) வாங்கும் போது 30 ஆயிரம் ரூபாய் மானியம் பெறும். டெல்லியில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும். அதாவது, டெல்லியில் வசிப்பிடச் சான்று உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | பைக் வாங்கப்போறீங்களா? இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கோங்க

மானியத் திட்டத்தின் 8 சிறப்பம்சங்கள்
இ-சைக்கிள் வாங்குவதற்கு 5,500 மானியம்.
முதல் 10,000 வாடிக்கையாளர்கள் அதன் பலனைப் பெறுவார்கள்.
முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம்.
ஹெவி டியூட்டி இ-சைக்கிள் அல்லது கார்கோ சைக்கிள் வாங்குவதற்கு ரூ.15,000 மானியம்.
ஹெவி டியூட்டி இ-கார்கோ சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 வாடிக்கையாளர்கள் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
வணிக மின் வண்டிகள் வாங்குவதற்கு 30,000 மானியம்.
வணிகப் பயனர்கள் மற்றும் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தின் பலன் டெல்லியில் குடியிருப்பவர்ககளுக்கு மட்டுமே கிடைக்கும்.
டெல்லி சாலைகளில் தற்போது மொத்தம் 45,900 எலக்ட்ரிக் வாகனங்கள் ஓடுவதாகவும், அதில் 36 சதவீத வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார். அதே நேரத்தில் டெல்லியில் மின்சார வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 12 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | ஹீரோ இரு சக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: ஏப்ரல் மாத பம்பர் ஆஃபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (07.04.2022) கடைசி நாள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலையில் இருந்த இணைய சர்வர் தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக கோளாறு ஏற்பட்டுள்ளது.

Also Read : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 1,625 காலிப்பணியிடங்கள்

இதனால் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வருகிற 17-ம்தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லட்டு பிரியரா நீங்கள்? வீட்டிலேயே சுவையான லட்டு தயார் செய்யலாம்!


லட்டு பிரியரா நீங்கள்? வீட்டிலேயே சுவையான லட்டு தயார் செய்யலாம்!


இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. வெறும் 3 பொருட்களை கொண்டு 10 நிமிடங்களில் வீட்டிலேயே லட்டுகளை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.,

தேவையான பொருட்கள் :

2 கப் துருவிய தேங்காய்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் தூள் - ஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும். 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம். அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும்.

லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி கொண்டு லட்டுகளை அலங்கரித்து பரிமாறலாம்.

இந்த லட்டுகளை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Also Read : புரோட்டீன் சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் 5 சைவ உணவுகள்..!

பூந்தி லட்டு :

தேவையானவை:

கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி, உலர்திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

Also Read : கோவில் புளியோதரை ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள்.. 

 

ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும். பின்னர் நெய்யில் முந்திரி, உலர்திராட்சையை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் . இப்போது பூந்தியைப் பாகு சூடாக இருக்கும் போதே ஒன்று சேர்க்கவும். கையில் நெய்யை தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்து வைக்கவும். சுவையான லட்டு தயார். இப்போது நீங்கள் அனைவருக்கும் பரிமாறலாம்.

‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்


‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்


Sorry, Readability was unable to parse this page for content.

மண் வளத்தை பாதுகாக்க ஐநாவின் ஒலித்த சத்குருவின் குரல்



மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய சத்குரு, அதற்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

“மண் அழிவை தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்” என ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சத்குரு பேசினார்.

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற உலகாளவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதுகுறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், தனது பயணத்தின் 16வது நாளில் ஜெனிவா நகரை சென்றடைந்தார்.

மேலும் படிக்க | ‘அன்புள்ள சத்குருவுக்கு.!’ - சோனியா...

விரிவாக படிக்க >>

Wednesday, April 6, 2022

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை, 3 அண்ணன்கள்.. 2 ஆண்டு கருக்கலைப்பு, நரக வேதனை



17 வயது சிறுமி

இந்தநிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்தும் ஷெரீபின் மனைவி ஜமீலா சிறுமியை மிரட்டி உள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர்...



எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள்...



அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மோதல்!

பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நீடித்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பாதியிலேயே வெளியேறினார்!

 

Tuesday, April 5, 2022

மொட்டைதலையுடன் சஞ்சனா கல்ராணி… என்ன ஆச்சு…ஏன் இந்த முடிவு !



பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியுள்ளார். அதில், நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

நான் பார்ப்பவரின் கண்களுக்கு...

விரிவாக படிக்க >>

மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


மிகவும் மேம்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி? Samsung Galaxy A53 5G Unboxing & First Look


Sunday, April 3, 2022