லட்டு பிரியரா நீங்கள்? வீட்டிலேயே சுவையான லட்டு தயார் செய்யலாம்!
தேவையான பொருட்கள் :
2 கப் துருவிய தேங்காய்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் தூள் - ஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும். 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.
இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம். அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும்.
லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி கொண்டு லட்டுகளை அலங்கரித்து பரிமாறலாம்.
இந்த லட்டுகளை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
Also Read : புரோட்டீன் சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் 5 சைவ உணவுகள்..!
பூந்தி லட்டு :
தேவையானவை:
கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி, உலர்திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
Also Read : கோவில் புளியோதரை ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள்..
ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும். பின்னர் நெய்யில் முந்திரி, உலர்திராட்சையை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் . இப்போது பூந்தியைப் பாகு சூடாக இருக்கும் போதே ஒன்று சேர்க்கவும். கையில் நெய்யை தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்து வைக்கவும். சுவையான லட்டு தயார். இப்போது நீங்கள் அனைவருக்கும் பரிமாறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
No comments:
Post a Comment