Thursday, April 7, 2022

பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


புதுடெல்லி: டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.

யமஹா எலக்ட்ரிக் சைக்கிள் விலை
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (E-Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும். 

அதே நேரத்தில், எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம் கிடைக்கும். இது தவிர, கனரக மின்சார வாகனங்கள் மற்றும் வணிக மின் வண்டிகளுக்கும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மின்சார சைக்கிள், ஹெவி டியூட்டி எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் இ-கார்ட்ஸ் எலக்ட்ரிக் சைக்கிள் ஆகியவற்றிற்கான மானியத்தை அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

மின்சார சைக்கிள் வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்கள் இந்த மானியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.  

இ-கார்கோ மற்றும் ஹெவி டியூட்டி இ-சைக்கிளில் கிடைக்கும் கார்கோ இ-சைக்கிள் வாங்கும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும்.  
இப்போது நிறுவனங்களும் திட்டத்தின் பலனைப் பெறும்.

மின்சார வாகனங்கள் அல்லது ஹெவி டியூட்டி சைக்கிள்களை வாங்கும் தனிப்பட்ட வாங்குபவர்களுக்கு முன்பு இந்தச் சலுகை கிடைத்தது,  இப்போது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கார்ப்பரேட் அல்லது நிறுவனம் இ-கார்ட் (e-carts) வாங்கும் போது 30 ஆயிரம் ரூபாய் மானியம் பெறும். டெல்லியில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும். அதாவது, டெல்லியில் வசிப்பிடச் சான்று உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | பைக் வாங்கப்போறீங்களா? இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கோங்க

மானியத் திட்டத்தின் 8 சிறப்பம்சங்கள்
இ-சைக்கிள் வாங்குவதற்கு 5,500 மானியம்.
முதல் 10,000 வாடிக்கையாளர்கள் அதன் பலனைப் பெறுவார்கள்.
முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம்.
ஹெவி டியூட்டி இ-சைக்கிள் அல்லது கார்கோ சைக்கிள் வாங்குவதற்கு ரூ.15,000 மானியம்.
ஹெவி டியூட்டி இ-கார்கோ சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 வாடிக்கையாளர்கள் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
வணிக மின் வண்டிகள் வாங்குவதற்கு 30,000 மானியம்.
வணிகப் பயனர்கள் மற்றும் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தின் பலன் டெல்லியில் குடியிருப்பவர்ககளுக்கு மட்டுமே கிடைக்கும்.
டெல்லி சாலைகளில் தற்போது மொத்தம் 45,900 எலக்ட்ரிக் வாகனங்கள் ஓடுவதாகவும், அதில் 36 சதவீத வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார். அதே நேரத்தில் டெல்லியில் மின்சார வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 12 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | ஹீரோ இரு சக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: ஏப்ரல் மாத பம்பர் ஆஃபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

No comments:

Post a Comment