Friday, April 15, 2022
சித்ரா பௌர்ணமி 2022 | சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு | Chitra Pournami 2022 poojai home
சித்ரா பௌர்ணமி 2022 | சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு | Chitra Pournami 2022 poojai home
Thursday, April 14, 2022
40 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை..!!!: ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,006-க்கும், சவரன் ரூ.40,048-க்கும் விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாரா வகையில் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கு விற்கப்படுகிறது.
Tags:...
விரிவாக படிக்க >>
Wednesday, April 13, 2022
போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!
அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் "கணக்கு வைத்திருப்பவரின் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் தனது சேமிப்புக் கணக்கை மூத்த குடிமக்கள் சேமிப்புத்...
விரிவாக படிக்க >>
உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைனில் மனித உரிமைகள் மீறலில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டு பெண்களை ரஷ்ய ராணுவம் பாலியல்...
விரிவாக படிக்க >>
Tuesday, April 12, 2022
உத்தப்பா, ஷிவம் துபே அதிரடி - 216 ரன்கள் குவித்த சென்னை அணி
அவரைத் தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 6.4 ஓவரில் வெறும் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ஷிவம்...
விரிவாக படிக்க >>
காண்டம் விளம்பரத்தை பகிர்ந்த சிம்புவின் வருங்கால மனைவி? வீடியோ வைரல்!
சிம்புவின் வருங்கால மனைவி என்று கூறப்படும் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்டம் விளம்பரத்தை பகிர்ந்துள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் சிம்புவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஒரு வதந்தி உலா வருகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தனது பக்கத்தில் காண்டம் விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். சிம்புவுக்கு மனைவியாகப் போகிறவர்...
விரிவாக படிக்க >>
Monday, April 11, 2022
oppo f21 pro unboxing tamil | First Impression - கேமரா சாம்ராட் 🔥
oppo f21 pro unboxing tamil | First Impression - கேமரா சாம்ராட் 🔥
நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்!மக்கள் கருத்து கேட்கலாம் என சமாளிப்பு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி உயர்வுக் கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்; மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ம.தி.மு.க., மற்றும் சுயே., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மண்டல அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்து, சொத்து வரி உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 600 சதுரடிக்கும் குறைவான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம்; 601 முதல், 1,200 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்.மேலும், 1,201 முதல், 1,800 சதுரடி வரை...
விரிவாக படிக்க >>
பாரம்பரிய மீன்பிடித் திருவிழா... 1000க்கும் மேற்பட்டோர் ஊத்தா கூடைகளுடன் பங்கேற்பு
Home » photogallery » tamil-nadu » SIVAGANGAI DISTRICT TRADITIONAL FISHING FESTIVAL MORE THAN 1000 PEOPLE PARTICIPATE WITH PURPLE BASKETS SKV
Sivaganga District | காரைக்குடி அருகே கே.ஆத்தங்குடி கண்மாயில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊத்தா மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீனை பிடித்துச் சென்றனர்.
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறது.இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குஜராத். சேஸிங் செய்யும்போதும் சரி, டிபண்ட் செய்யும்போதும் சரி, விட்டுக்கொடுக்கும் எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல் கடுமையாக போராடி வெற்றியை பெறுகிறது குஜராத்.
பேட்டிங்கை பொறுத்தவரை அட்டகாச பார்மில் இருக்கும் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இக்கட்டான சூழல் தரும் அழுத்தத்தை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், அபாரமாக விளையாடும் ராகுல் தெவாட்டியா குஜராத்துக்கு கூடுதல் பலம். தமிழக வீரர் சாய் சுதர்சனும் பேட்டிங்கில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார்.
பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி, ஃபர்குஷன் என பலம் வாய்ந்த பவுலர்களை வைத்து எதிரணியின் பேட்டிங்கை துவம்சம் செய்கிறது குஜராத். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல், தன் இயல்பான பார்மை அந்த அணி வெளிப்படுத்தினாலே சன் ரைசர்ஸை எளிதாக சாய்த்து விட முடியும்.
மறுபக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த ஆட்டத்திலும் சன் ரைசர்ஸ் களமிறங்கும்.
பார்முக்கு வராமல் இருந்த அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியன்சனும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள்.
உம்ரான் மாலிக், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் குஜராத் பேட்டிங் லைன் அப்பிற்கு கடும் போட்டியை அளிக்க இயலும். அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடும்போது மட்டுமே பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்த இயலும்.
உத்தேச அணி
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக்/ கார்த்திக் தியாகி, டி நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ் : மேத்யூ வேட், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
- பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில்
- ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, ராகுல் திவேத்தியா
- பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபர்குசன்.