Saturday, April 9, 2022

MI: ‘ஒழுங்க விளையாடுங்க பாஸ்’…இல்லைனா இடம் கிடைக்காது: சீனியருக்கு ரோஹித் எச்சரிக்கை!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 18ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்றஆர்சிபிமுதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பை இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் இருவரும் தலா 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து டிவோல்ட் பிராவிஸும் 8 (11) சிறபாக சோபிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து திலக் வர்மா, கெய்ரன் பொல்லார்ட் இருவரும் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். இந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க...

விரிவாக படிக்க >>

கடைசி பந்தில் கிளீ்ன் போல்டானார் இம்ரான் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி| Dinamalar



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பரபபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் சூறாவளி சுழற்றி அடித்தது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி பதவி விலக வலியுறுத்தி வந்தன. இருப்பினும் நான் கிரிக்கெட் வீரன்.கடைசி பந்து வரையிலும் நம்பிக்கையுடன் போராடுவேன் என பிரதமர் இம்ரான் கூறி வந்தார்.

இதனிடையே அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பார்லியின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இருப்பினும் எதிர்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை...

விரிவாக படிக்க >>

Friday, April 8, 2022

கனடாவில் இந்திய மாணவர் சுட்டு கொலை: உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை



கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த வியாழக்கிழமை சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் கார்த்திக் வாசுதேவை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது .

கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் கார்த்திக்கின் உடலை இந்தியா...

விரிவாக படிக்க >>

ஏப்-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94



சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags:

ஏப்-09 பெட்ரோல் டீசல் விலை


ராகுலை தலைவராக்க வேண்டும்!



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

Thursday, April 7, 2022

அரசு துறைகளில் காலி இடங்கள் உடனே நிரப்ப பிரதமர் உத்தரவு ..| Dinamalar



புதுடில்லி-”காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க, தனியாரை ஊக்குவிக்க வேண்டும் என, மத்திய அரசின் துறை செயலர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்,” என, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தெரிவித்து உள்ளார்,

ஆலோசனை

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, செயலர்கள் பலர், பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து, கவலை தெரிவித்தனர். ‘அவை பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை; இந்த திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதை போல, அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது’ என குறிப்பிட்டனர்.

இந்நிலையில், மத்திய அரசின் துறை...

விரிவாக படிக்க >>

‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்



விரிவாக படிக்க >>

கூட்டமாய் வந்து மீன் வேட்டை நடத்தும் சிங்கங்கள்


கூட்டமாய் வந்து மீன் வேட்டை நடத்தும் சிங்கங்கள்


நாட்டுக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள் தனது இடத்திற்கு செல்ல மறுக்கும் விநோதமான சம்பத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டையும் எதிர்கொள்கிறது கனடாவின் மீன் பண்ணை ஒன்று.

ஒரு பண்ணைக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள், அங்கிருந்த மீன்களை சாப்பிட்டு முடித்த பிறகும் வெளியேற மறுக்கின்றன. தொழில்துறை மீன் பண்ணையில் நுழைந்த கடல் சிங்கங்கள் கட்டுப்பாடுகள் இன்றி மீன்களை உண்டு ஏப்பம் விடுகின்றன.  

மேற்கு கனடாவில், ஒரு தொழில்துறை மீன் பண்ணைக்குள் நுழைந்த டஜன் கணக்கான கடல் சிங்கங்கள், வாரக்கணக்கில் அங்கேயே தங்கிவிட்டன.  

பிரிட்டிஷ் கொலம்பியாவில் டோஃபினோவுக்கு அருகில் அமைந்துள்ள பண்ணைக்குள் தவறி நுழைந்த இந்த கடல் சிங்கங்கள், கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் அங்கிருந்து நகர மறுக்கின்றன. 

மேலும் படிக்க | கனடாவில் பரவும் ஜாம்பி நோய்...சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

சிலி, நார்வே மற்றும் கனடாவில் செயல்படும் செர்மாக் நிறுவனத்திற்கு இந்தப் பண்ணை சொந்தமானது.

மார்ச் மாத இறுதியில், இந்த விலங்குகள், ரான்ட் பாயிண்ட் பண்ணையில் (Rant Point farm) வலை மற்றும் மின்சார வேலிகளைத் தாண்டி விட்டதாக மீன்வளர்ப்பு நிறுவனம் தெரிவித்தது.  

கடல் சிங்கங்களை விரட்ட நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. கடல் சிங்கங்களை வெளியேற்ற உரத்த சப்தங்களும் எழுப்பப்பட்டன.  

ஆனால் விலங்குகள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லையாம்! முதலில் ஒரு கடல் சிங்கம் எல்லையைத் தாணி உள் நுழைந்த பிறகு பல கடல் சிங்கங்கள் எல்லையை மீறி மீன் பண்ணைக்குள் நுழைந்தன. 

மேலும் படிக்க | புளித்த பிரட்டினால் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இவை வெளியேறினால் தான், எஞ்சியிருக்கும் மீன்களை ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் அறுவடை செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

கடந்த காலத்தில், கடல் சிங்கங்கள் மற்றொரு மீன் பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்தன. அந்த நேரத்தில், கனடாவின் மீன்வள மற்றும் பெருங்கடல்கள் துறை (DFO), விலங்குகளை சுட நிறுவனத்திற்கு அமுமதி அளித்தது.

ஆனால் இப்போது, ​​கடல் சிங்கங்கள் மிகவும் அருகிவிட்டதால் அவை கொல்லப்படக்கூடாது என்று அரசு தெரிவித்துவிட்டதால் கடல் சிங்கங்கள் எப்போது வெளியேற மனம் வைக்கும் என்று பண்ணைக்கு சொந்தக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

மேலும் படிக்க | காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


பம்பர் சலுகை! மின்சார சைக்கிள்களுக்கு மானியம் வழங்கும் டெல்லி அரசு


புதுடெல்லி: டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.

யமஹா எலக்ட்ரிக் சைக்கிள் விலை
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (E-Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும். 

அதே நேரத்தில், எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம் கிடைக்கும். இது தவிர, கனரக மின்சார வாகனங்கள் மற்றும் வணிக மின் வண்டிகளுக்கும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மின்சார சைக்கிள், ஹெவி டியூட்டி எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் இ-கார்ட்ஸ் எலக்ட்ரிக் சைக்கிள் ஆகியவற்றிற்கான மானியத்தை அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

மின்சார சைக்கிள் வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்கள் இந்த மானியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.  

இ-கார்கோ மற்றும் ஹெவி டியூட்டி இ-சைக்கிளில் கிடைக்கும் கார்கோ இ-சைக்கிள் வாங்கும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும்.  
இப்போது நிறுவனங்களும் திட்டத்தின் பலனைப் பெறும்.

மின்சார வாகனங்கள் அல்லது ஹெவி டியூட்டி சைக்கிள்களை வாங்கும் தனிப்பட்ட வாங்குபவர்களுக்கு முன்பு இந்தச் சலுகை கிடைத்தது,  இப்போது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கார்ப்பரேட் அல்லது நிறுவனம் இ-கார்ட் (e-carts) வாங்கும் போது 30 ஆயிரம் ரூபாய் மானியம் பெறும். டெல்லியில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும். அதாவது, டெல்லியில் வசிப்பிடச் சான்று உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | பைக் வாங்கப்போறீங்களா? இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கோங்க

மானியத் திட்டத்தின் 8 சிறப்பம்சங்கள்
இ-சைக்கிள் வாங்குவதற்கு 5,500 மானியம்.
முதல் 10,000 வாடிக்கையாளர்கள் அதன் பலனைப் பெறுவார்கள்.
முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் மானியம்.
ஹெவி டியூட்டி இ-சைக்கிள் அல்லது கார்கோ சைக்கிள் வாங்குவதற்கு ரூ.15,000 மானியம்.
ஹெவி டியூட்டி இ-கார்கோ சைக்கிள்களை வாங்கும் முதல் 5,000 வாடிக்கையாளர்கள் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
வணிக மின் வண்டிகள் வாங்குவதற்கு 30,000 மானியம்.
வணிகப் பயனர்கள் மற்றும் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தின் பலன் டெல்லியில் குடியிருப்பவர்ககளுக்கு மட்டுமே கிடைக்கும்.
டெல்லி சாலைகளில் தற்போது மொத்தம் 45,900 எலக்ட்ரிக் வாகனங்கள் ஓடுவதாகவும், அதில் 36 சதவீத வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார். அதே நேரத்தில் டெல்லியில் மின்சார வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 12 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | ஹீரோ இரு சக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: ஏப்ரல் மாத பம்பர் ஆஃபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (07.04.2022) கடைசி நாள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலையில் இருந்த இணைய சர்வர் தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக கோளாறு ஏற்பட்டுள்ளது.

Also Read : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 1,625 காலிப்பணியிடங்கள்

இதனால் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வருகிற 17-ம்தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.