National Teachers Award 2022 - Selected List Published
PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, ஸ்டடி மெட்டீரியல்ஸ், ஆன்லைன் சோதனைகள்
குடும்ப தலைவிகளுக்கு SmartPhone வழங்கும் திட்டம் – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 1.33 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் வழங்கப்படும் என்று அம்மாநில தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன் திட்டம்
இந்தியாவில் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பர். அதில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 1.33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 3 ஆண்டுகளுக்கு இலவசமாக இன்டர்நெட் வசதியும் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து 12,000 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் போது குடும்ப பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். பணத்தின் இயக்கம் நாள் முழுவதும் தொடரும், நாள் முடிந்த பிறகு நீங்கள் சேமிக்க முடியும் குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்துவிடாதீர்கள். இன்று உங்கள் காதலன் தனது உணர்வுகளை உங்கள் முன்னால் திறந்து வைக்க முடியாது, இதன் காரணமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள். நெருங்கிய நண்பரின் தவறான ஆலோசனையால் இந்த ராசிக்காரரின் வர்த்தகர்கள் இன்று சிக்கலில் சிக்கலாம். இன்று, வேலை தேடுபவர்கள் புலத்தில் சிந்தனையுடன் நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை நெருங்க முயற்சிப்பார்கள், ஆனால் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.
பரிகாரம் :- ஓம் கிராம் க்ரீம் க்ரோம் பாவுமயே நமஹ: இந்த மந்திரத்தை காலையில் 11 முறை உச்சரிப்பதன் மூலம் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மறைந்ததிமுகதலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டிசென்னையில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற்றது.
முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர்.
அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை நடைபெற்ற இந்த பேரணியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.