Saturday, August 20, 2022

குடும்ப தலைவிகளுக்கு SmartPhone வழங்கும் திட்டம்!!1297416646


குடும்ப தலைவிகளுக்கு SmartPhone வழங்கும் திட்டம்!!


குடும்ப தலைவிகளுக்கு SmartPhone வழங்கும் திட்டம் – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 1.33 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் வழங்கப்படும் என்று அம்மாநில தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் திட்டம்

இந்தியாவில் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பர். அதில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 1.33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 3 ஆண்டுகளுக்கு இலவசமாக இன்டர்நெட் வசதியும் வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து 12,000 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் போது குடும்ப பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment