Saturday, August 6, 2022

கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி339935926


கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி


மறைந்ததிமுகதலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டிசென்னையில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர்.

அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை நடைபெற்ற இந்த பேரணியில்,  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி  கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment