கேரளாவில் தென்மேற்கு பருவ மழை மூன்று நாட்களுக்கு முன்னதாக துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடதக்கது
பாசுமதி அல்லாத அரிசி மற்றும் ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த பொருட்களின் விலைவாசி உயர்வுக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ஏற்றுமதிக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, 150 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரிசி உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதால், உள்நாட்டில் அரிசி விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
அரிசி மீதான கட்டுப்பாடுகள் சர்க்கரை மீதான கட்டுப்பாடுகள் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியா 6.115 பில்லியன் டாலர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் விவசாயப் பொருட்களில் அரிசி ஏற்றுமதியில் தான் அன்னிய செலவாணி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோதுமை ஏற்றுமதியை தடை செய்ததற்கு இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும், ஏற்றுமதி தடையை விலக்க வேண்டும் என்று கெஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால் உலகநாடுகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி பிரியம் கர்க் – அபிஷேக் சர்மா களமிறங்கினார்கள். இதில் 4 ரன்கள் அடித்து பிரியம் கர்க் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ஐடென் மார்க்கம் களமிறங்க, சிறப்பாக ஆடிவந்த அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 5 ரன்கள் எடுத்து நிகோலஸ் பூரண் வெளியேற, பின்னர் களமிறங்கிய ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 26 ரன்கள் அடிக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்யவுள்ளது.
உலக நாடுகளை மெல்ல மிரட்டி வரும் குரங்கு காச்சல் அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற 12 நாடுகளில் பரவிய நிலையில் 92 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள ஒரு விமான தளத்தில் ஜப்பானுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் புறப்படுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, குரங்கு காய்ச்சலைப் பற்றி அனைவரும் கவலை கொள்ள வேண்டும். அமெரிக்க சுகாதார அதிகாரிகள் சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை ஆராய்ந்து வருகின்றனர். நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் தடுப்பூசிகள் கிடைக்க கூடும் என்று கூறியிருக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய திட்டங்களை துவங்கி வைக்கவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் சர்மா களமிறங்கினார்கள்.
இதில் 2 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழக்க, தேவால்டு களமிறங்கி இஷான் கிஷனுடன் இணைந்தார். இவர்களின் கூட்டணி சிறப்பாக ஆடிவர, 48 ரன்கள் அடித்து இஷான் கிஷன் அவுட் ஆகி அதனை உடைத்தார். அவரைதொடர்ந்து 37 ரன்கள் அடித்து தேவால்டு வெளியேற, பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 21 ரன்கள் எடுத்தும், அதிரடியாக ஆடிவந்த டிம் டேவிட் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இறுதியாக மும்பை அணி 19.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் டெல்லி அணி, தனது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறி காத்திருப்பு பட்டியலில் இருந்த பெங்களூர் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது.