
டி20 போட்டிகளில் 10,500 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி!

லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப் ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. மே 15-ம்தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் முதற்கட்டமாக கமலின் வரி...
விரிவாக படிக்க >>
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ அதற்கு பான் அல்லது ஆதார் கார்டு அவசியம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஏற்கனவே உள்ள டிடிஎஸ் உடன் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையையும் கண்காணிக்க வழிவகுக்கும். மேலும் வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் 194N விதிகள் ஏற்கனவே உள்ளது,...
விரிவாக படிக்க >>



ஐஸ்வர்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்ததை முத்துராசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தினம் தினம் ஐஸ்வர்யாவுக்கு ஃபோன் செய்து டார்ச்சர் செய்து வருகிறார் முத்துராசு. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் நடந்த திருமண வாழ்கையை சந்தோஷமாக வாழ முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா. இன்றைய எபிசோடில் கை உடைந்து வீட்டில் இருக்கும் மாறனுக்கு தாமரை அனைத்து பணிவிடைகளையும் செய்கிறார். ஆனாலும் தனது கோபத்தை தாமரை மீது காட்டுகிறார் மாறன். இதனால் தாமரை கண்ணீர் விடுகிறார்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 19ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 152ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4859.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 19 ரூபாய் குறைந்து ரூபாய் 4840.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38872.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 152 குறைந்து ரூபாய் 38720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.50 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 66.00என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love


உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆனபின் வெளியாக இருக்கும் முதல் படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது .

உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் அருண்ராஜா காமராஜ் டச் இருப்பது தெரிய வருகிறது. எனவே இந்த படம் ’கனா’ படம் போலவே மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love