Sunday, May 8, 2022

DRDO Recruitment: இளநிலை ஆராய்ச்சி(JRF) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்  (DRDO) இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் (Junior Research Fellow) பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கல்வித்தகுதி:Computer Science and Engineering/Technology, Computer Science and Automation Engineering/Technology, Computer Science/Technology and Informatics Engineering,
Computer Science and System Engineering,
Computer Science and Information Technology,
Information Technology, Computer Science/Engineering/Technology,  Software Engineering/Technology,  Information Science and Engineering/Technology, Computer and Communication Engineering,  Computer Networking ஆகிய பாடப்பிரிவில் பல்கலைக்கழக மானியக் குழு/ AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிடபட்டுள்ள பாடங்களில் தகுந்த கேட்/நெட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

(அல்லது)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்...

விரிவாக படிக்க >>

Saturday, May 7, 2022

ராஜ யோக தரும் அதிசய வேர்|இந்த வேரின் ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க!Adhirshtam|Rajayogam


ராஜ யோக தரும் அதிசய வேர்|இந்த வேரின் ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க!Adhirshtam|Rajayogam


ராஜ யோக தரும் அதிசய வேர்|இந்த வேரின் ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க!Adhirshtam|Rajayogam


ராஜ யோக தரும் அதிசய வேர்|இந்த வேரின் ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க!Adhirshtam|Rajayogam


Friday, May 6, 2022

10 நிமிடத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்பரான ப்ரைட் ரைஸ் ஒருமுறை இப்படி சமைத்து பாருங்கள். இது கடையில் வாங்கிய ப்ரைட் ரைஸா என்று எல்லோரும் கேட்பார்கள்.



என்னதான் வீட்டில் ஆரோக்கியமாக நாம் சமைத்துக் கொடுத்தாலும், நம்முடைய நாக்கு ஹோட்டல் ஸ்டைல் ருசியைத் தான் தேடுகின்றது. அந்த வரிசையில் பொதுவாகவே ஃப்ரைட் ரைஸ் என்றால், நாம் ரெஸ்டாரண்டில் சென்று தான் சாப்பிடுவோம். ஹோட்டலில் அந்த ப்ரைட் ரைஸை அப்படியே பவுலில் எடுத்து வரும்போதே ஒரு நல்ல வாசம் வீசும். வீட்டில் என்னதான் முயற்சி செய்தாலும் அந்த வாதத்தை கொண்டு வர முடியாது. ஆனால் பின் சொல்லக்கூடிய மெத்தடை ட்ரை பண்ணுங்க. நிச்சயமாக ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் உங்க கையாலயே வீட்டிலேயே செய்யலாம்.

garlic-rice

முதலில் பாசுமதி அரிசியை...

விரிவாக படிக்க >>

சிவகார்த்திகேயனின் செயலால் அப்சட்டான பிரபல நடிகர்..!



சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளின் மூலம் மளமளவென வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலிலிருந்து முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் எதிர்நீச்சல் திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சில சறுக்கல்கள்

தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயனுக்கு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை....

விரிவாக படிக்க >>

Thursday, May 5, 2022

உம்ரன் மாலிக்கின் 2 ஓவர் கோபாலின் 1 ஓவரால் தோற்ற சன் ரைசர்ஸ்- பழிதீர்த்த டேவிட் வார்னர்- டெல்லி ‘கில்லி’



கடந்த சீசனில் கொஞ்சம் கூட மரியாதை காட்டாது நடத்தப்பட்ட வார்னர் தன் முந்தைய அணியான சன் ரைசர்ஸுக்கு எதிராக பழித்தீர்ப்பு இன்னிங்சை ஆடி 58 பந்துகளில் 92 நாட் அவுட் என்று அபாரமாக ஆடியதோடு எதிர்முனையில் ஆடிய போவெலையும் அடி அடி என்று கொலவெறி ஊக்கமளிக்க போவெல் 35 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 67 ரன்களை எடுக்க 207 ரன்களைக் குவித்த டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 186/8 என்று மடக்கி அபார வெற்றி பெற்றனர்.

சன் ரைசர்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் 190 ரன்களுக்கும் மேலாக வாரி வழங்கியதற்குக் காரணம் மாறிப்போன பிட்ச்கள் என்றும் கூறலாம்.

இந்த வெற்றி மூலம் 5 வெற்றிகளுடன் டெல்லி 10 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு முன்னேற 2ம் இடத்தில் ஒரு கட்டத்தில் இருந்த சன் ரைசர்ஸ் தொடர் தோல்விகளினால் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிட்ச்கள்...

விரிவாக படிக்க >>

இது வயிற்றில் உள்ள வாயு அழுக்குகள் அனைத்தையும் கரைத்து மிகவும் சுத்தமாக மாற்றும் !



விரிவாக படிக்க >>

செல்போனில் எச்சில் துப்பி அன்லாக் செய்த இளம்பெண் – வைரலாகும் வீடியோ!



அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் மிலா மோனட். இவர் தனது தோழிகளுடன் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செல்போனை வெளியே எடுத்து சமதளத்தில் வைத்துள்ளார்.

இதன் பின்னர் அதன் கீபேடில் உள்ள ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலை துப்ப தொடங்குகிறார். இதுபோன்று 6 வெவ்வேறு எண்களின் மீது துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது.

உடனே மெல்ல தலையை தூக்கி எதிரில் இருப்பவர்களை நோக்கி, வாயின் ஓரத்திலுள்ள எச்சிலை துடைத்தபடியே...

விரிவாக படிக்க >>

Wednesday, May 4, 2022

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை



சென்னை: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்துக்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 11 நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டு மீண்டும் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதற்கு...

விரிவாக படிக்க >>

Tuesday, May 3, 2022

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம், கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்



கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருப்பது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கத்திரி வெயில் இன்று முதல் அதாவது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில்...

விரிவாக படிக்க >>

சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்! என்று டெல்லி மக்கள் எங்களை கிண்டல் செய்தனர்: சஞ்சு சாம்சன்


சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்! என்று டெல்லி மக்கள் எங்களை கிண்டல் செய்தனர்: சஞ்சு சாம்சன்


கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது முந்தைய நாட்களில் டெல்லியில் இருந்தபோது தனது பெற்றோர்கள் எப்படி அவதூறுகளை எதிர்கொண்டார்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.  

"எங்கள் பெற்றோர்கள், எங்கள் கிட் பேக்குகளை [நானும் என் சகோதரனும்] மிகவும் சிறியவர்களாக இருந்ததால் எடுத்துச் செல்வார்கள். 'சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்... அவர் டெண்டுல்கராக மாறுவார்' என்று மக்கள் குறிப்பிடுவார்கள்," என்று அவர் கூறினார்.  சாம்சன் மேலும் கூறினார், "இப்படி நிறைய வேடிக்கையாக இருந்தது...

ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்."

+2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!


+2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!


தமிழ்நாட்டில் நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், முக்கிய பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.

வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

 

பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையைக் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி +2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மே 5) முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையும் 10ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

 

தமிழக அரசு

இதற்கான ஹால் டிக்கெட்டும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என்ற போதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுதும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

செல்போனுக்கு தடை

இதனிடையே பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்தார்.

 

ஆள்மாறாட்டம்

அதேபோல பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், தேர்வை ரத்து செய்து அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், குறிப்பிட்ட நபருக்குத் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிரத் தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களைப் பட்டியலிட்டு, அதற்கான தண்டனையையும் பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது,

 

வினாத்தாள்

மேலும், பொதுத் தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆவது சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Sunday, May 1, 2022

ரெண்டு நாளைக்கு வெயில் கொளுத்துமாம்... உஷாரா இருங்க மக்களே!



தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03.05.2022 முதல் 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் மூடப்படும் ரெனால்ட் நிசான் நிறுவனம்?...

விரிவாக படிக்க >>