வடிவேலுவுக்கே தெரியாமல் பாட வைத்தேன்... இசையமைப்பாளர் பரத்வாஜ் பகிர்ந்த சுவாரசிய நிகழ்வு!
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக விளங்கி கொண்டுள்ளவர் நடிகர் வடிவேலு 90களில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு இப்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத காமெடி கிங்காக மாறியுள்ளார். அன்று முதல் இன்று வரை வடிவேலுவின் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களின் காமெடிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது குறிப்பாக இன்றைய தலைமுறையினரும் விரும்பி ரசிக்கக்கூடிய வடிவேலுவின் காமெடிகள் எக்கச்சக்கமாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் ஏங்க வைத்தது
வடிவேலு மீண்டும் நடிப்பார் என பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வடிவேலுவுக்கு என்றே கதையம்சம் அமைக்கப்பட்டு இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்று தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பாடகராகவும் பல திறமைகளை கொண்டுள்ள வடிவேலு சில பாடல்களை பாடியும் உள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வடிவேலுவுக்கே தெரியாமல் அவரை பாடவைத்தது குறித்து சுவாரஸ்ய நிகழ்வு பகிர்ந்துள்ளார்.
வடிவேலு மற்றும் பார்த்திபன் பாரதிகண்ணம்மா,வெற்றிக்கொடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வடிவேலு மற்றும் பார்த்திபன் காமெடி நன்றாக ஒர்க்அவுட் ஆனதால் இருவரும் இணைந்து குண்டக்க மண்டக்க என்ற படத்தில் நடித்தனர் முழுக்க முழுக்க காமெடி கதை தளத்தில் வெளியான இந்தப் படத்தை இயக்குனர் அசோகன் இயக்கியிருந்தார். பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.
அப்போது பரத்வாஜ் வடிவேலுவை பாட கேட்டுள்ளார் அதற்கு வடிவேலு எனக்கு பாடல் எல்லாம் வராது என கூறியுள்ளார் இந்த நிலையில் நான் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லுங்கள் என ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வைத்து பரத்வாஜ் சொல்ல சொல்ல வடிவேலு அப்படியே ரிப்பீட் செய்துள்ளார். அதை அப்படியே ரெக்கார்ட் செய்த பரத்வாஜ். பின் வடிவேலுவுக்கே அதை போட்டு காட்டி சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அந்தப் பாடல்தான் குண்டக்க மண்டக்க படத்தில் இடம்பெற்ற வந்துட்டான்யா பாடல் . இந்த தகவலை பரத்வாஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment