Saturday, April 2, 2022

தமிழச்சி தங்கபாண்டியனிடம் கைவரிசை: டெல்லியில் பரபரப்பு!



டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்...

விரிவாக படிக்க >>

இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! கோயம்பேடு காய்கறிகளின் விலை அதிரடிஉயர்வு! முழு விலை பட்டியல்  3-4-2022


சென்னை கோயம்பேட்டில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் விலைஉயர்வு முழு விலை பட்டியல் நிலவரம்

பெரிய வெங்காயம் : 1 கிலோ ₹18.00

 சின்ன வெங்காயம் 1 கிலோ ₹40.00

 கோல்ராபி (நூக்கல்) 1 கிலோ ₹25.00

 பெங்களூர் தக்காளி : 1 கிலோ ₹7.00

 வெண்டக்காய் : 1 கிலோ ₹40.00

 புதினா : 1 கொத்து ₹15.00

 பீன்ஸ் : 1 கிலோ ₹30.00

 பீட்ரூட் : 1 கிலோ ₹40.00

 பாகற்காய் : 1 கிலோ ₹50.00

 சுரைக்காய் : 1 கிலோ ₹20.00

 கத்திரிக்காய் : 1 கிலோ ₹30.00

 அவரக்காய் 1 கிலோ ₹30.00

 முட்டைக்கோஸ்  : 1 கிலோ ₹25.00

 காலிஃபிளவர் : 1 துண்டு ₹30.00

 சாயோட் : 1 கிலோ ₹35.00

செப்பங்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 கொத்தமல்லி : 1 கொத்து ₹10.00

 வெள்ளரிக்காய் : 1 கிலோ 30.00

 குடமிளகாய் : 1 கிலோ ₹60.00

 கேரட் : 1 கிலோ ₹40.00

 முருங்கைக்காய் : 1 கிலோ ₹50.00

 இஞ்சி : 1 கிலோ ₹20.00

 பச்சை மிளகாய் : 1 கிலோ ₹40.00

 பச்சை வாழைப்பழம் : 1 துண்டு ₹10.00

 வாழைப்பூ : 1 கிலோ ₹20.00

 வாழைத்தண்டு : 1 துண்டு ₹10.00

 உருளைக்கிழங்கு : 1 கிலோ ₹20.00

 பூசணிக்காய் : 1 கிலோ ₹20.00

 முள்ளங்கி : 1 கிலோ ₹30.00

 முருங்கைப்பூ : 1 கிலோ ₹20.00

 ஸ்கார்லெட் பூசணி : 1 கிலோ ₹25.00

 புடலங்காங் : 1 கிலோ ₹40.00

 சக்கரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹25.00

 மரவல்லி கிழங்கு : 1 கிலோ ₹30.00

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: இலக்கை எட்டியது ஐ.சி.எஃப்.



விரிவாக படிக்க >>

நான் அரசியல்வாதி அல்ல - பீஸ்ட் டிரெய்லரில் விஜய்



இளைய தளபதி நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லரை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக மாலை 6 மணிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது! எங்கு தெரியுமா?

நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் தங்களின் டிவிட்டர் சமூகவலைதள பக்கங்களில் பீஸ்ட் டிரெய்லரை பகிர்ந்தனர்....

விரிவாக படிக்க >>

Friday, April 1, 2022

PBKS: ‘தோல்விக்கு ரஸல் காரணமல்ல’…நாங்க இத செஞ்சிருக்கணும்: மயங்க் அகர்வால் ஷாக் பேட்டி!



15 ஆவது சீசனின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட்டது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்ச அதிரடியாக 9 பந்துகளில் 31 ரன்களும், ககிசோ ரபாடா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தாவும் சற்று தடுமாறியது. பவர்ப்ளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்த பஞ்சாபின் பக்கம் ஆட்டம் சற்று திரும்பியது. அப்போது களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸல்,...

விரிவாக படிக்க >>

மது கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்



திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூந்தோட்டம் பகுதியில் சாராயம் விற்றதாக கூறி கஸ்தூரியை பேரளம் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கஸ்தூரிக்கு சிறையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அங்கு பணியில் இருந்த...

விரிவாக படிக்க >>

Thursday, March 31, 2022

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏப். 30ம் தேதி வரை இலவச பார்க்கிங்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு



சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்களை வரும் 30ம் தேதி வரை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பனிமனை மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்த மார்ச் 13ம் தேதி முதல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்தது.

மேலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 31ம் தேதி வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் தொடர்ச்சியான...

விரிவாக படிக்க >>

Wednesday, March 30, 2022

Tuesday, March 29, 2022

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; தற்போது சிகிச்சையில் 339 பேர் மட்டுமே உள்ளனர்: சுகாதாரத்துறை அறிக்கை..!



சென்னை: தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,751 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில்...

விரிவாக படிக்க >>

Monday, March 28, 2022

ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷ் மீண்டும் எடுக்கப்போகும் அவதாரம்.. விஜய்டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்



தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் தனுஷ் தற்போது புது முடிவு ஒன்று எடுத்துள்ளாராம், நடிப்பை சற்று ஓரம் கட்டிவிட்டு ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக படங்களை இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். அதேபோல் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் வெளியான பவர் பாண்டி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் பிறகு, தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தனுஷ் மீண்டும் படத்தை இயக்குவதற்கு ஒரு சிறப்பான கதையை வைத்துள்ளாராம். விரைவில் இப்படத்தை...

விரிவாக படிக்க >>

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

ஐபிஎல் டி20 போட்டி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி



மும்பை: ஐபிஎல் டி20-யில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களமிறங்கி 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அனையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.4 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 161 எண்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Tags:

குஜராத் டைட்டன்ஸ்
விரிவாக படிக்க >>

Oscar 2022: மனைவி குறித்து கிண்டல்.. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் (வீடியோ)



ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிண்டலாக பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் பளார் என அறைந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் தன் செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜாடா...

விரிவாக படிக்க >>